ஸினஸ்தீஸியா
நீங்கள் பார்க்கும் சிவப்புதான் நான் பார்க்கும் சிவப்பு என்று உங்களால் உத்தரவாதமாக சொல்லமுடியுமா?நீங்கள் பார்ப்பதுதான் உலகத்தில் எல்லோரும் பார்க்கும் சிவப்பா? அல்லது நீங்கள் பார்ப்பதுதான் சிவப்பு என்று எந்த அறிவை வைத்து சொல்கிறீர்கள்? இளையராஜாத்தனமான கேள்விதான். இப்படி வைத்துக் கொள்ளுங்கள், பிறந்ததிலிருந்தே நான் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்தை நீங்கள் மஞ்சள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்; என் மஞ்சள்தான் உங்களின் சிவப்பு. இதை, இல்லையென்று நம்மால் நிரூபிக்கமுடியுமா? உங்களை நான் அழைத்துக்கொண்டுப்போய், ரத்தம், குங்குமம், ரோஜா என நாம் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்திலான பொருட்களை காட்டுகிறேன். என் கண்ணுக்கு அவை என்னுடைய சிவப்பு நிறத்தில் தெரியும். உங்கள் கண்ணுக்கு அது உங்களின் சிவப்பு நிறத்தில் (அதாவது என்னுடைய மஞ்சள் நிறத்தில்) தெரியும். ஆக, இருவரும் காண்பது ஒரே பெயரிலான நிறத்தையேயொழிய ஒரே நிறத்தை என்று சொல்லிவிட முடியுமா? பிறப்பிலிருந்தே நாம் பார்க்கும் அந்த வண்ணக்கலவையிலான காட்சிகள்தான் எல்லோர் கண்களிலும் தெரிகிறதா? வேகமாக படித்திருந்தால் இந்த பத்தியில் நான் சொல்லியிருக்கும்...